கூட்டேரிபட்டில் பாமக சார்பில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை

56பார்த்தது
கூட்டேரிபட்டில் பாமக சார்பில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை
பா. ம. க. , மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11ம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கூட்டேரிப்பட்டில் நடந்தது. கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் எம். எல். ஏ., தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் புகழேந்தி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் செங்கேணி வரவேற்றார். கூட்டத்தில் எம். எல். ஏ., பேசுகையில், மயிலம் சட்டசபை தொகுதியில் இருந்து முழு நிலவு இளைஞர் மாநாட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால், செல்வராஜ், பாலு, முருகன், சக்திவேல், சுரேஷ், ஒன்றிய செயலாளர் தேசிங்கு, முத்துகிருஷ்ணன், சண்முகம், ராஜி, சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி