தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் உதவித் தொகை வழங்குவதற்கான தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். இந்தாண்டு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்று எழுதினர்.
இந்தத் தேர்வில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிகள் காயத்ரி, ஆஷிகா ஆகியோர் 95 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துச் சாதித்துள்ளனர். இந்த மாணவிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகனை நேரில் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். பள்ளித் தாளாளர் ராஜசேகரன், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளித் தாளாளர் முத்துசரவணன், பொருளாளர் சிதம்பரநாதன், முதல்வர் யமுனாராணி உட்பட ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.