விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். புகழேந்தி எம். எல். ஏ. , முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி பேசினார். விழாவில், கர்ப்பிணிகளுக்கு 5 வகையான ஊட்டசத்து உணவுகள், வளையல்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், தாம்பூலம் மற்றும் கர்ப்பக்கால பராமரிப்பு கையேடு ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.