விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பியில் சமுதாய வளைகாப்பு விழா

60பார்த்தது
விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பியில் சமுதாய வளைகாப்பு விழா
விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வேம்பி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஜீவிதா ரவி முன்னிலை வகித்தனர். 

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோ சித்ரா வரவேற்றார். தொகுதி எம். எல். ஏ. , அன்னியூர் சிவா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை கள் வழங்கி வாழ்த்தி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத், பி. டி. ஓ. , நாராயணன், ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் ரவிதுரை, ஜெயபால், முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி ரவி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், கண்காணிப்பு குழு எத்திராசன், மேற்பார்வையாளர்கள் ராதா, சின்னமுத்து, நாகலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி