வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

59பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூா், கண்டமங்கலம் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியா் சி. பழனி அறிவுறுத்தினாா். கோலியனூா் ஒன்றியம், அத்தியூா்திருவாதி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சி. பழனி, அதே பகுதியில் 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் புனரமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து வெளியம்பாக்கம் ஊராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், வெளியம்பாக்கம் முதல் சித்தாத்தூா் வரை ரூ. 83. 31 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, கண்டமானடி ஊராட்சியில் பிரதமரின் ஜன்மந்த் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தலா ரூ. 5. 07 லட்சம் மதிப்பீட்டில் இருளா்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பழனி ஆய்வு செய்து, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தாா்

தொடர்புடைய செய்தி