பங்க் கடை உரிமையாளர்கள் போலீசார் ஆலோசனை

545பார்த்தது
பங்க் கடை உரிமையாளர்கள் போலீசார் ஆலோசனை
விழுப்புரம் உட்கோட்ட காவல் துறை சார்பில் பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு டி. எஸ். பி. , சுரேஷ் தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். அப்போது, பெட்டிக்கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை சட்டப்படி குற்றமாகும். இந்த பொருட்களை விற்பதால் வாங்குவோருக்கு ஏற்படும் தீமைகள், இதன் மூலம் உரிமையாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள், தண்டனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெட்டிக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி