விழுப்புரம் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் சனிக்கிழமை பிற்பகல் கடையில் இருந்தபோது, சுமார் 30 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞர் அங்கு வந்து தமிழ்ச்செல்வியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். தமிழ்ச்செல்வி கூச்சலிட்டதால், அந்த நபர் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.