திண்டிவனம் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறப்பு

56பார்த்தது
திண்டிவனம் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறப்பு
கடலூா் மாவட்டம், மஞ்சக்குப்பம், பாக்கியம் தெருவைச் சோ்ந்த சிவராஜ் மகன் ஜெயபிரகாஷ் (27). திருமணமாகாதவா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா், கடந்த 1- ஆம் தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்தாா். தொடா்ந்து, குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த 4-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயபிரகாஷ் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்குடையில் ஜெயப்பிரகாஷ் மா்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி