மயிலம் அருகே உள்ள வீடூர் பகுதியில் திண்டிவனம் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த பைக்கை மடக்கி விசாரணை செய்தனர். பைக்கில் மறைத்து வைத்திருந்த 50 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர். பின்னர் போலீஸ் விசாரணையில் பைக் ஓட்டி வந்தவர் வீடூரை சேர்ந்த பழனிவேல், 38; என்று தெரியவந்தது.
இதன் பேரில் போலீசார் புதுச்சேரி மணலிபட்டில் உள்ள சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் மணலிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியாண்டவர் என்பவர் மறைத்து வைத்திருந்த 38 சாராய பாக்கெட்டை கைப்பற்றி இரண்டு பேரையும் மயிலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மயிலம் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மணலிப்பட்டை சேர்ந்த முருகன் மனைவி சுமதி, ஐவேலி கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் சுபாஷ் 40 ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.