கல் விழுந்து தொழிலாளி பலி

73பார்த்தது
கல் விழுந்து தொழிலாளி பலி
மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 4: 00, மணிக்கு கிணற்றிலிருந்து கல் எடுத்து கிரேன் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தது.

அப்போது மேலே துாக்கிய பெரிய கல் எதிர்பாராத விதமாக கிரேனிலிருந்து நழுவி கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு, 52; என்பவரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து வி. ஏ. ஓ. , ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you