அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

76பார்த்தது
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
மேல்மலையனுார் ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் திட்டத்தின் கீழ், தலா ரூ. 5. 07 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் கட்டப்படுவதை, கலெக்டர் பழனி பார்வையிட்டு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார். இதையடுத்து, வளத்தி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3. 53 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டுவதை, ஆய்வு செய்தார். தொடர்ந்து, வளத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டார பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டப்பட்டுள்ளதை, கலெக்டர் ஆய்வு செய்தார்.

இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, பார்வையிட்ட கலெக்டர் சிகிச்சை பெறுவோரிடம், இங்குள்ள சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். டாக்டர்கள், செவிலியர்கள் வருகை பதிவேடு, இருப்பு பதிவேடு, உள்நோயாளிகள், புறநோயாளிகள் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின், கலெக்டர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். பி. டி. ஓ. , க்கள் சையத் முகமத், சிவ சண்முகம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி