வல்லம் ஒன்றிய கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்திற்கு, சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி. டி. ஓ. , க்கள் உதயகுமார், இளங்கோ முன்னிலை வகித்தனர். மேலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். கூட்டத்தில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடந்தது. ஒன்றிய செலவின தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தணைச் சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, கவுன்சிலர்கள் இந்துமதி, அமிர்தம், கோபால், ராஜேந்திரன், ஜெயலலிதா, ஏழுமலை, பத்மநாபன், லட்சுமி, சிலம்பரசி, கம்சலா, விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.