செஞ்சியில் அரசுப் பள்ளி சமையல் உதவியாளா்களுக்கு பயிற்சி

80பார்த்தது
செஞ்சியில் அரசுப் பள்ளி சமையல் உதவியாளா்களுக்கு பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர். விஜயகுமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தார். செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

முகாமில், உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவி மற்றும் அதன் முக்கியத்துவம், நோய் எதிர்ப்புக்கு பாதுகாப்பாக சிறுதானிய ஊட்டச்சத்தும் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அரங்க. ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர் பச்சையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, குமார், சசிகலா, காஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி