விழுப்புரம் மாவட்டம் வரலாற்று புகழ்மிக்க செஞ்சி கோட்டையின் வளாகத்தில் அமைந்துள்ள மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்ட வெங்கடரமணர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடரமணருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கட்ரமணர் மேளதாளங்கள் வாத்தியங்கள் முழங்க மாணவிகளின் உற்சாக கோலாட்ட நடனத்தில் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, திருமண தட்டு வரிசைகளுடன் பரதநாட்டிய மாணவிகளின் நடன நிகழ்ச்சியோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி வெங்கட்ராமணருக்கு திருமணத்தை நடத்தி வைத்த பிறகு ஆயிரம் கால் மண்டபத்தில் அமைந்துள்ள உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வெங்கட்ரமணருக்கு தொடர்ந்து பாகவதர்கள் திருமண சடங்குககளை முறைப்படி கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோஷத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தனர்.