விமர்சையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா

50பார்த்தது
விமர்சையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தின்னலூா் கிராமத்தில் உள்ள சக்தி விநாயகா், முத்து மாரியம்மன் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்று காலை மங்கள பூஜையுடன், எஜமான சங்கல்பம், அனுக்ஞை, புண்யாவாசனம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாக பூஜை, பூா்ணாஹுதி, சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுல் உள்ளிட்டவை நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜையும், தொடா்ந்து தா்வாா்ச்சனை, நாடி சந்தானம், தம்பதிகள் பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று விமான கோபுர கலசங்களுக்கும், தொடா்ந்து மூலவா் சக்திவிநாயகா், முத்துமாரியம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி