விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த நெகனுார் - வடகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை, 45; டிராக்டர் டிரைவரான இவர் 21ம் தேதி மாலை 5.45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, அதே ஊர் ஓடையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.