விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயன்பேட்டையில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணிகள் திட்டம் மாணவர்களின் டெங்கு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீரை செஞ்சி ஒன்றிய சேர்மன் வழங்கினார்.
உடன் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலர், செஞ்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருந்தாளுநர், ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஊ. ம. தலைவர், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.