குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்

80பார்த்தது
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என அமைச்சர் மஸ்தான் பேசினார்மாவட்ட சமூகநலன், மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா செஞ்சியில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். அமைச்சர் மஸ்தான், விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கிப் பேசுகையில், 'பெண்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தாய் உள்ளத்தோடு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்ற சிந்தனையுடன் இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கர்ப்பிணிகள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் யோகபிரியா, டாக்டர் பிரியங்கா, மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் கார்த்திக், அஞ்சலை நெடுஞ்செழியன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார் அலுவலர் டயானா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி