செஞ்சியில் புத்தக திருவிழா; இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

58பார்த்தது
செஞ்சியில் புத்தக திருவிழா; இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு
செஞ்சி சாராத மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 24ம் தேதி முதல் செஞ்சியில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. 1ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் ஒரு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். 4ம் நாள் நிகழ்ச்சியில் உள்ளூர் படைப்பாளிகளின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. 

இந்த நிகழ்ச்சிக்கு பாலாஜி குழுமம் தொழிலதிபர் சுரேஷ் தலைமை தாங்கினார். விழா இணை ஒருங்கிணைப்பாளர் தென்னரசு வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் அருள், ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், அமுதன் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். 

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களின் ஹைகூ கவிதை தொகுப்பின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். பெற்றோர் புத்தகத்தை பெற்று கொண்டனர். தொகுப்பாசிரியர் செந்தில்பாலா ஏற்புரை நிகழ்த்தினார். 

சாராத மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கலைச் செல்வன், ஆலம்பூண்டி ராஜா தேசிங்கு வித்யாலயா பள்ளி தாளாளர் வெங்கடேசன், செஞ்சி வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் சங்கர், வட்டார கல்வி அலுவலர் முருகன், பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி