விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் மகன் சுகுமார், 28: கொத்தனார். இவரது மனைவி திவ்யா, 20; குடிப்பழக்கம் உள்ள சுகுமார், திவ்யாவை தன்னுடன் வேலைக்கு வருமாறு தொந்தரவு செய்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுகுமாருக்கும், திவ்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திவ்யாவை, சுகுமார் தாக்கினார். பாடுகாயமடைந்த திவ்யா மயங்கி விழுந்தார். மறுநாள் காலை சுகுமார் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். நீண்டநேரமாக திவ்யா வீட்டில் இருந்து வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது திவ்யா நினைவற்று கிடந்தார். இதுகுறித்து வி. ஏ. ஓ. , முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்ததில், திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். வி. ஏ. ஓ. , முருகன் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார், திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுகுமாரை நேற்று கைது செய்தனர்