கண்டாச்சிபுரத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

73பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா கடந்த ஒரு வாரமாக 1434 ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு ஜமாபந்தியில் மனு அளித்த பட்டா தொடர்பாக 73 பேருக்கு பட்டா ஆணையும், 5 பேருக்கு வேளாண் விதை பயிர்களும், 2 பழங்குடியினருக்கு இலவச வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கி பேசினார். தொடர்ந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், லூயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி, வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி