விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள சத்தியமங்கலத்தில் ராஜாதேசிங்கு வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அச்சரப்பாக்கம் எஸ்.ஆர்.எம். வேளாண் கல்லூரி மாணவர்கள் இணைந்து விவசாயிகள் தினத்தை முன்னிட்டு 'விவசாயத்தை காப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளித் தாளாளர் கவுசல்யா ஊர்வலத்தை துவக்கிவைத்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, உதவிப் பேராசிரியர் சாத்தையா முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் துவங்கி கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக 'விவசாயத்தை காப்போம்' என்ற கோஷத்துடன் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. இதில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர்.