செஞ்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது. விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த போராட்டத்தில் வீர மரணம் அடைந்த 59 உழவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் செஞ்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினர்.
மாவட்ட அவைத் தலைவர் ஏழுமலை, செயலாளர் தங்கராசு, அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சிலம்பரசன், தாமரைக்கண்ணன், உதயகுமார், சரவணன், தியாகு பழனி, சிவக்குமார், ஏழுமலை, கோகுல் மற்றும் செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம், செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் துவங்கி, திண்டிவனம் சாலை, கூட்டுரோடு வழியாக திருவண்ணாமலை ரோட்டில் முடிந்தது.