அம்பேத்கரை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் விநாயகம் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமரன், சூரியமூர்த்தி, செல்வம், புவனேஸ்வரன், இளவழகன், உதயானந்தன், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, வெங்கடேஷ், ஜெயகணேஷ், பொன்ராஜா, அஜீஸ், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.