கண்டமங்கலத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

79பார்த்தது
கண்டமங்கலத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி தலைமை வகித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். 

கட்சி ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பணிகள், அதற்கான திட்டமிடல் போன்றவை குறித்து அவா் எடுத்துரைத்தாா். கூட்டத்தில், கண்டமங்கலம் வடக்கு வட்டாரத் தலைவா் ராதா, வானூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கிருஷ்ணா நந்தன், மாவட்ட பொதுச் செயலா் சிவசெல்வம், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கிருஷ்ணகுமாா், வட்டார நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பிருந்தா, வீரப்பன், ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி