விழுப்புரம்மாவட்டம் சமூகநலத்துறை மற்றும் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செஞ்சி வட் டாரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா செஞ்சி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூ ராட்சி மன்ற தலைவர்மொக் தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகிவரவேற் றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது தமிழ் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்ற சிந்தனையுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும், மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.