விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த முன்னாள் தாலுகா
காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீ. பெருமாள் நயினாரின் 37-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செஞ்சி காந்தி கடைவீதியில் உள்ள அவரது சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் வீ. ரங்கநாதன், வி. பி. என். கோபிநாத், வி. பி. என். செஞ்சி பாபு, வி. பி. என். காமராஜ், வி. பி. என். சரவணன், முன்னாள் அ. தி. மு. க. நகர செயலாளர் பிரித்திவி ராஜ்,
காங்கிரஸ் பிரமுகர் கார் வண்னன்,
காங்கிரஸ் நகர தலைவர் சூரியமூர்த்தி, விஜய குமார் மற்றும் சரவணன், ரவிக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.