முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் மஸ்தான் கேட்டு கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த சோ. காட்டுக்குளத்தில் இன்று 3ம் தேதி மாலை 5: 00 மணிக்கு ஆரணி தொகுதி வேட்பாளர் தரணிவேந்தன், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தலைமை தாங்குகிறார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பூத் ஏஜன்ட்டுகள் மற்றும் தொண்டர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.