விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், JVs திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K. S. மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப. சேகர், முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. மாசிலமணி மாவட்ட துணை செயலாளர்கள் அமுதா, ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமணன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.