அன்புத்தம்பி விக்ரம் மறைவு அதிர்ச்சி, வேதனையை தருகிறது என சீமான் தெரிவித்துள்ளார். இயக்குனர் & நடிகர் விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நாதக சீமான், "அப்பா பாலு மகேந்திராவிடம் பயின்று வளர்த்தெடுத்த படைப்பாற்றல் மூலம், திரைத்துறையில் சாதனைகள் புரிய கனவு கொண்டிருந்த தம்பி விக்ரம் சுகுமாரன் மறைவெய்தியது ஏற்றுக்கொள்ள முடியாத மனவலியைத் தருகிறது. சாதிய சிக்கல்களை களைந்து, சமூக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தும், மண் மணம் மாறாத அவரது திரைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்கள்" என கூறியுள்ளார்.