2011 ஆண்டு வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில், நடிகர் விக்ரமின் மகளாக நடித்த சாரா அர்ஜூன், முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து அவர் 'சைவம்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், சாரா தற்போது பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 40 வயதான ரன்வீருக்கு ஜோடியாக 18 வயதுடைய சாரா நடித்துள்ளது சமூக வலைதளங்களில்
பேசுபொருளாகியுள்ளது.