"விஜயதரணி சீட் வேண்டாம் என கூறினார்" - அண்ணாமலை

706பார்த்தது
"விஜயதரணி சீட் வேண்டாம் என கூறினார்" - அண்ணாமலை
விளவங்கோட்டில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சமூக வலைதளத்தில் பலரும் விஜய தரணியை கிண்டல் அடித்து வந்தனர். இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியில் சில காலம் தொண்டராக பயணிக்க விரும்புதாகவும், அதனால் கன்னியாகுமரி மற்றும் விளவங்கோட்டில் சீட் வேண்டாம் என விஜயதரணி மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி