விஜயகாந்தின் கல்லூரி கைமாறியது.. கடன் பிரச்சனையா?

54பார்த்தது
விஜயகாந்தின் கல்லூரி கைமாறியது.. கடன் பிரச்சனையா?
விஜயகாந்த் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியை தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனலட்சுமி சீனிவாசன் குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், “ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரி, இப்போது துடிப்பான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தமிழகத்தின் முன்னோடி கல்வி நிறுவனமான தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் கீழ் புதுப்பொலிவுடன் இயங்க உள்ளது என தெரிவித்துள்ளது. கடன் பிரச்சனை காரணமாகவே இந்த கல்லூரி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி