கடந்த 2009ல் ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய். இந்தச் சந்திப்பிற்கு முன்னால் வரைக்கும் விஜய் திமுகவிற்குதான் ஆதரவாக இருக்கிறார் என்கிற ஒரு பிம்பம் இருந்தது. 2011ல் திமுக ஆட்சியில் விஜயின் 'காவலன்' படத்தின் வெளியீட்டின் போது சிக்கல்களை ஏற்படுத்தி, படத்தின் ரிலீஸை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தன. இந்த சமயத்தில் விஜய் அதிமுக விற்கு ஆதரவானார். அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக இருப்பேன் என்று கூறினார்.