காஞ்சிபுரம்: ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் தவெக தலைவர் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் நாளை (ஜன.20) சந்திப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏகனாபுரத்தில் மக்களை சந்திப்பதற்கான இடத்தை முடிவு செய்வது பற்றி இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், "விஜய் நாளை காலை 11 முதல் ஒரு மணி வரை கேரவனில் இருந்தபடியே மக்களிடம் உரையாற்ற உள்ளார்" என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.