தவெகவின் முதல்வர் வேட்பாளராக விஜய் நிறுத்தப்படுவார், திமுக, பாஜகவுடன் தங்கள் கட்சி கூட்டணி வைக்காது என்று தவெக தலைமை அறிவித்தது. மேலும் பாஜகவோடு கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் திமுகவோ அதிமுகவோ அல்ல என்று விஜய் விமர்சித்தார். அதிமுக மீதான விஜயின் விமர்சனம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, தங்கள் கட்சியை வளர்க்க மற்ற கட்சிகளை விமர்சனம் செய்யாமல் யார் தான் இருப்பார்கள் என்றார்.