தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 2ஆம் கட்டமாக 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்குகிறார். முதற்கட்டமாக கடந்த 30ஆம் தேதி 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.