புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை, தவெக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு தரக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரிடம் விஜய் சார்பில் கடிதம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் செல்ல இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 2022 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் தற்போது வரை போராட்டம் நடத்தி வருகின்றனர்.