சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜன.12 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.