விஜய் என்னுடன் போனில் பேசவில்லை: வெளியான தகவலுக்கு EPS மறுப்பு

69பார்த்தது
தவெக-வின் ஆதவ் அர்ஜுனா அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குறித்து ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தனது பேச்சுக்கு ஆதவ் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய், இபிஎஸ் உடன் போனில் பேசியதாக ஒரு தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள இபிஎஸ் விஜயுடன் பேசவில்லை என கூறியுள்ளார். ஆதவ் தன்னை பற்றி பேசியது குறித்த கேள்விக்கு, "அவரே மறுபடி ட்வீட் செய்துவிட்டாரே" என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி