பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இளைஞர் ஒருவர் ரயிலுக்குள் பைக் ஓட்டி வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் MEMU ரயிலில் இளைஞர் ஒருவர் யாருக்கும் அஞ்சாமல் தனது பைக்கை ஓட்டி வந்துள்ளார். அங்கிருந்த பயணிகளும் அவரை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. "பவர் ஆஃப் பீகார்" என்ற தலைப்பில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் ரயில்வே நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.