ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தை உணராமல் இளம்பெண் ஒருவர் ஓடும் ரயில் படிக்கட்டில் நின்றபடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் படியில் தொங்கியபடி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் இளம்பெண் பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.