ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண் ஒருவர் அதிவேகமாக செல்லும் ரயிலின் கதவில் தொங்கி ஊஞ்சலாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் ரயிலின் படிகட்டில் ஒற்றைக்கையில் தொங்கிக் கொண்டு பயமின்றி பயணித்துள்ளார். அந்த பெண் மட்டுமல்லாது, பின்னால் சில ஆண்களும் இதேபோன்ற ஆபத்தான சாகசங்களை செய்கிறார்கள். சமீப காலத்தில் இளைஞர்கள் ரயிலில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.