அமித்ஷா இன்று மதுரைக்கு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், "நாங்கள் மதுரையில் கூடினாலே திமுகவினருக்கு அச்சம் வருகிறது. மீனாட்சியும், முருகனும் எங்களுக்கு அருள் புரிந்துவிடுவார்கள் என பயம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீக மாநாடு நடக்கிறது. அதை பற்றியெல்லாம் திருமாவளவன், சேகர்பாபு கவலைப்பட வேண்டாம். 2026-இல் நீங்கள் ஓய்வெடுக்கலாம்" என்றார்.