அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270-ஐ கடந்துள்ளது. விமானமானது மருத்துவ விடுதி கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. இந்நிலையில் விடுதியில் இருந்த சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். "மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பெரிய சத்தம் கேட்டது. முதல் மாடியில் இருந்து குதித்து தப்பித்தேன். பிறகுதான் அது விமான விபத்து என தெரிந்தது" என்றார்.