சேலம்: தலைவாசல் அருகே கருவின் பாலினத்தை அறிய ஸ்கேன் செய்த இருவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பாலினத்தை அறிய வீட்டில் ஸ்கேன் செய்த பிரசாத் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த வீட்டில் இருந்து ரூ.20,000 பணம் மற்றும் ஸ்கேன் செய்ய பயன்படுத்தும் கருவிகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கருவின் பாலினத்தை அறிவது சட்டப்படி குற்றமாகும்.