கர்நாடகா: ராய்ச்சூர் அருகே அக்னி குண்டத்தில் விழுந்தவர் உடல் கருகி உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரகுண்டி கிராமத்தில் நேற்றிரவு (ஜூ.05) மொஹரம் கொண்டாட்டத்தின் போது, ஹனுமந்தா பாட்டீல் (45) எதிர்பாராதவிதமாக அக்னி குண்டத்தில் விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர். இதையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹனுமந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.