சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. லாரியானது சாலையில் தாறுமாறாக சென்ற நிலையில் அங்கிருந்த கம்பத்தில் படுபயங்கரமாக மோதியது. இதில் லாரி அப்பளம் போல நொறுங்கியதில் உள்ளிருந்த ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தியதோடு போக்குவரத்தையும் சீரமைத்தனர்.