திமுக கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., "மத்திய அரசு திட்டங்களை கொண்டு வருவார்கள். ஆனால் அது என்ன திட்டம் என்றே நமக்கு புரியாது. ஏனெனில் மாநில மொழியிலும் ஆங்கிலத்திலும் பெயர் வைக்க மாட்டார்கள். நானே ஒரு கமிட்டி பொறுப்பில் உள்ளேன். திட்டத்தை புரிந்து கொள்வதற்குள் தலைசுற்றிவிடும். கிசான், போஷா என புரியாமல் பெயர் வைப்பார்கள்" என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.