மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே. 12-ல் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மல்லிகை, துளசி, ரோஜா, சம்மந்தி கொண்ட பூப்பல்லக்கில் கருப்பண்ணசாமி கோயில் முன் கள்ளழகர் எழுந்தருளி தீபாராதனை முடித்துவிட்டு அழகர் மலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை (மே. 16) காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார்.